தென்னாப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவி டேன் வான் நீகெர்க் மற்றும் அதே அணியின் வேகப்பந்து வீச்சாளர் மரிசான் காப் ஆகிய இருவருக்கும் ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்தவிட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக சமூகவலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

டேன் மற்றும் மரிசான் ஆகிய இருவரும் 2009ஆம் ஆண்டில்  ஒரே நேரத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்காக அறிமுகமாயினர்.

இருவரும் தென் ஆப்பிரிக்க அணியின் முக்கிய வீராங்கனைகளாக திகழும் நிலையில் இருவருக்குள்ளும் சில ஆண்டுகளாக இருந்த நட்பு காதலாகி தற்போது திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.