சிறுவன் ஒருவனை பொலிஸார் மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் தனது தொகுதியில் இடம்பெற்றுள்ளது என முன்னாள் இராணுவதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

கீழ்த்தரமான முறைகேடான தந்திரோபாயங்களை பின்பற்றுவதன் மூலம் பொலிஸாரினால் பாதள குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முடியாது.

எனது தேர்தல் தொகுதியில் பொலிஸார் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்,அப்பாவிகளின் வீட்டில் போதைப்பொருட்களை வைத்த பின்னர் அவர்களிற்கு எதிரா வழக்கு தாக்கல் செய்துள்ளனர்,கப்பம் கேட்டுள்ளனர் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

என்னுடைய தொகுதியில் சிறுவன் ஒருவனை பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துசென்று சிறுவனின் கண்ணில் மிளகாய்தூளை போட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவனின் தலையை பொலித்தீன் பையினால் மூடிய பின்னர் அவனை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியுள்ளனர் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நடைமுறைகள் மூலம் பாதளஉலக குழுக்களை கட்டுப்படுத்த முடியாது,பொலிஸார் நேர்மையான முறையில் நடந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.