கல்குடா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வர்த்தகர் ஒருவரிடமிருந்து மூன்று இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற முற்பட்டபோது இலஞ்ச தடுப்பு ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த வர்த்தகருக்கு பொலிஸ் நற்சான்றிதழ் வழங்குவதற்காக அவர் ஐந்து இலட்சம் ரூபாவை கோரியதாகவும் அப் பணத்தொகையில் மூன்று இலட்சம் ரூபாவை ஆரம்ப கட்டமாக பெற்றுக்கொள்ளும் போதே கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும் இலஞ்ச தடுப்பு ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.