டிரம்பின் கார் ஓட்டுனருக்கும் சம்பளப் பிரச்சினை

Published By: Digital Desk 4

10 Jul, 2018 | 02:01 PM
image

மேலதிக நேர பணிக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது அவரது கார் ஓட்டுனர் புகார் அளித்துள்ளார்.

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கார் ஓட்டுனராக பணி புரிந்தவர் நோயல் சின்ட்ரன். இவர் கடந்த 25 ஆண்டுகளாக டிரம்பின் கார் ஓட்டுனராக இருந்தார்.

டிரம்ப், அவரது குடும்பத்தினர் மற்றும் வர்த்தக நிறுவன அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் ஓட்டுனராக பணியாற்றினார். இந்நிலையில் அவர் டிரம்ப் நிறுவனத்தின் மீது நீமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், கடந்த 6 ஆண்டுகளாக டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்துக்கு 3,300 மணி நேரம் ‘மேலதிக நேரம்’ பணி செய்துள்ளேன். ஆனால் அதற்கான சம்பளம் தரவில்லை. எனவே மணிக்கு ரூ.4 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 20 இலட்சம் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ஓட்டுனர் நோயல் சின்ட்ரனின் குற்றச்சாட்டை டிரம்ப் நிறுவனம் மறுத்துள்ளது. அவருக்கு உரிய சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. அவரது புகாரை நீதிமன்றத்தில் சந்திப்போம் என தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17