இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று இராஜாங்க அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். 

உள்நாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராக இருந்த ஜே.சி. அலவத்துவல அதே அமைச்சுக்கான இராஜாங்க அமைச்சராகவும், மலைநாட்டு புதிய கிராமங்கள் பிரதி அமைச்சராக இருந்த லக்கி ஜயவர்தன நீர்வழங்கல் துறை இராஜாங்க அமைச்சராகவும் பதவி ஏற்றுள்ளனர்.