கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஹெரோயின் போதைப் பொருள் அடங்கிய பொதியொன்றை மீட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த இந்த ஹெரோயின் போதைப் பெருளின் பெறுமதியானது மூன்று மில்லியன் ரூபா எனவும் மும்பையிலிருந்து மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்தே இந்த ஹெரோயினை மீட்டுள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த  சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இருவரை கைதுசெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.