இலங்கையில் இடம்பெறவுள்ள பிரமாண்டமான இசை நிகழ்ச்சிக்கு உரிமைகோறும் விதமாக 2018 ஆம் ஆண்டிற்கான கொழும்பு இசைக் கொண்டாட்டத்தை  நடத்த சினமன் லைகப் தயாராகி வருகின்றது. 

இந்நிகழ்வை கண்டுக்களிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி மாலை ஹவ்லொக் விளையாட்டுக்கழக  மைதானத்தில் ஒன்றுகூட  தயாராக இருங்கள். 

மேற்கிந்திய பாணியில் வடிவமைக்கப்பட்ட இசைத்தொடரில் உலக பிரசித்திப்பெற்ற இசை நட்சத்திரங்களான டயனா கிங் மகஸ் பிரிஸ்ட் மற்றும் பிக் மவுன்டன் ஆகியோர் உங்களை இசையால் விருந்து படைக்க உள்ளனர்.

முழுக்க முழுக்க ரகி மற்றும் டான்ஸ்-ஹோல் சாயலில் இடம்பெறவுள்ள இந்த இசைக் கொண்டாட்டத்தை சிறப்பிக்க வரவுள்ள நான்கு இசைக்கலைஞர்களும் நிகழ்ச்சியின் பிரமாண்டத்தை உறுதிசெய்யும் வகையில் அமைந்துள்ளார்கள்.

கடந்தகாலம் தொட்டு தற்காலம் வரை சிறந்த உலகில் முன்னிலை தரவரிசைகளை சுவீகரிக்கும்  இசைப் படைப்புக்களை வழங்கிய பெருமைக் கொணடுள்ள இந்த இசைக்கலைஞர்களின் பாடல் வரிக்கிரமம், இவ்விசைக் கொண்டாட்டத்தை  நூதன மற்றும் நவீன இசைகளின் சங்கமமாய் மாற்றியமைக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

 பிரசித்திப் பெற்ற நடனக்கலைஞர்கள் நடன வித்துவான்கள் மற்றும் பொப்-அப் பாணியில் அமைந்த பல இசை அம்சங்களை தன்னகம் கொள்ளவுள்ள இந்த இசைக் கொண்டாட்டம்  உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை பெற்றுத்தரும்.

நிறப்பூச்சு மற்றும் சோர்ப் பந்து விளையாட்டுக்கள் உட்பட சவர்க்கார காற்பாந்து கூட இக் கொண்டாட்டத்தை  அலங்கரிக்கவுள்ளன.