மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணை செயற்பாட்டில் சர்வசேத பங்காளர்களை  ஈடுபடுத்துவது குறித்து அரசாங்கம்  ஆராய்கின்றது.  பாதிக்கப்பட்ட மக்கள் இந்த பொறிமுறையில்நியாயமான முறையில்   நீதி  கிடைக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர்.  எனவே நாங்கள் இந்த செயற்பாட்டில் சர்வதேச செயற்பாட்டாளர்களின் பங்களிப்பு குறித்து  பரிசீலிக்கின்றோம்  என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர  வொஷிங்டனில் தெரிவித்துள்ளார். 

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை   இலங்கையில் அமுல்படுத்துவதற்கு  தயாராகவுள்ளோம்.   சர்வதேச  அழுத்தங்களினால்  நாம் இதனை செய்யவில்லை. மாறாக   இலங்கையின் எதிர்க்காலத்தை கருத்தில் கொண்டு  நாங்கள் இதனை மேற்கொள்கின்றோம் . 

எனவே  நாங்கள் சர்வதேசத்திலும்   எம்மீது நம்பிக்கை வைத்து  எங்களுடன்  இணைந்து செயற்படுமாறும்  அர்த்தமுள்ள  முன்னேற்றகரமான   இலங்கையை கட்டியெழுப்ப உதவுமாறும்   சர்வதேசத்திலும்  கோரிக்கை விடுக்கின்றோம்  எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

வொஷிங்டனில் அமைந்துள்ள  சமாதானத்திற்கான அமெரிக்க நிறுவனத்தில் நிகழ்த்திய  சொற்பொழிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.