`அண்ணனுக்கு ஜே' படத்தின் வெளியீட்டு  திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது. 

ராஜ்குமார் இயக்கியிருக்கும்  இந்த  படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். 

இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி  இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.