தென்னாசியாவில் அதிகமானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை- சாலிய பீரிஸ்

Published By: Rajeeban

10 Jul, 2018 | 10:30 AM
image

தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் தொடர்பான 13,000 கோப்புகளை முன்னைய தேசிய நல்லிணக்க ஒருங்கிணைப்பு அமைச்சு வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காணாமல்போனவர்கள் குறித்த ஆவணங்களை அலுவலகம் கோரியதை தொடர்ந்து பல கிராமசேவையாளர்கள் தங்களிடமிருந்த கோப்புகளை அமைச்சிடம் கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சிடமிருந்து 13,000 கோப்புகள் கிடைத்துள்ளன,இந்த கோப்புகளில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம், என தெரிவித்துள்ள சாலிய பீரிஸ் குறிப்பிட்ட கோப்பில் உள்ள சம்பவங்கள் குறித்து ஏற்கனவே நாங்களும் ஆராய்ந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க எண்ணியுள்ளதாகவும் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

12 பிராந்தியங்களை  ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் இதில் 5 அலுவலகங்கள் வடக்கிலும் 3 அலுவலகங்கள் கிழக்கிலும் அமையவுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் எங்கள் விசாரணைகளை துரிதப்படுத்தமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவிலேயே அதிகளவானவர்கள் காணாமல்போன நாடு இலங்கை என தெரிவித்துள்ள சாலியபீரிஸ் 1970 களில் சைப்பிரசில் 4000 பேர் காணாமல்போனார்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக 1990களில் அலுவலகமும் அமைக்கப்பட்டது இந்த விசாரணைகள் இன்று வரை தொடர்கின்றன என தெரிவித்துள்ளதுடன் இலங்கையின் விசாரணைகளும் நீண்ட காலம் நீடிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34