சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து சிங்கப்பூறுக்கு வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்த முற்பட்ட ஒருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளதாக சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாணயத்தாள்களானது இலங்கை ரூபாவில் 27 இலட்சத்து 65 ஆயிரம் பெறுமதியானவையாகும். 

அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.