அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை,  ட்ரம்ப் தெரிவு செய்துள்ளார்.

தற்போதைய அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி 81 வயதான அந்தோணி கென்னடி இம் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறவுள்ளார்.இதனால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்புவதற்கே ட்ரம்ப் பிரெட் கவனாக்கை ட்ரம்ப் தெரிவு செய்துள்ளார்.

ட்ரம்ப் உச்ச நீதி மன்ற நீதிபதி தேர்விற்கு  தகுதியான 25 பேரது பட்டியலை தயார் செய்து அதில் நால்வரிடம்  கடந்த 2ஆம் திகதி நேர்காணல் நடத்தினார்.

அதைத் தொடர்ந்து மேலும் 3 நீதிபதிகளிடமும், 3 தனி நபர்களிடமும் நேர்காணல் நடத்திய ட்ரம்ப் நீதிபதி பதவிக்கு 3 பேர் கொண்ட இறுதிப்பட்டியலை தயார் செய்தார். 

அப் பட்டியலில் பிரெட் கவனாக், எமி கோனி பேரட் மற்றும் ரேமண்ட் கெத்லெட்ஜ் ஆகிய 3 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இம் மூவரில் முதல் இருவரில் ஒருவரை ட்ரம்ப் தேர்வு செய்யலாம் என தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியட்ட ட்ரம்ப், அமெரிக்க உச்ச நீதி மன்ற நீதிபதியாக பிரெட் கவனாக்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். அமெரிக்காவில் இப்பதவிக்கு கவனாக்கை விட தகுதியானவர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவித்தார்.

அமெரிக்க உச்ச நீதி மன்ற நீதிபதியாக தேர்வாகியிருக்கும் 53 வயதான பிரெட் கவனாக் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஆட்சிக்காலத்தில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள மத்திய மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பதவி புரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.