போலந்தைச் சேர்ந்த பேரா­சி­ரியர் ஒருவர் தொலைக்­காட்சி  நேரடி  ஒளி­ப­ரப்பு நிகழ்ச்­சி­யொன்றில் கலந்துகொண்டு அந்­நாட்­டி­லான அர­சியல் நிலைமை குறித்து  பேட்­டி­ய­ளித்துக் கொண்­டி­ருந்தபோது பூனை­யொன்று அவ­ரது தோளில் ஏறி அமர்ந்து தனது வாலால் அவ­ரது கண்ணை மறைத்து அவ­ரையும் பார்­வை­யா­ளர்­க­ளையும் திகைப்பில் ஆழ்த்­தி­யுள்­ளது.

பேரா­சி­ரி­ய­ரான கலா­நிதி ஜெர்ஸி தர்­கல்ஸ்கி நாட்டின் உச்சநீதி­மன்­றத்தின் சுயா­தீன தன்­மையை முடக்கும் அர­சாங்­கத்தின் முயற்­சிகள் குறித்து விப­ரித்துக் கொண்­டி­ருந்தபோது  குறிப்­பிட்ட பூனை அவ­ரது தோளில்  ஏறும் முயற்­சியில் ஈடு­பட்­டது.

தொலைக்­காட்சி நேரடி ஒளி­ப­ரப்புப் பேட்­டி­யென்­பதால் பேரா­சிரியர்  ஜெர்ஸி பூனையின் நட­வ­டிக்­கையை  அலட்­சியம் செய்து  தனது   பேட்­டியை  தொடர்ந்­துள்ளார்.

அவ­ரது சல­ன­மற்ற தன்­மையை தனக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்ட பூனை, அவ­ரது  தோளில் லாவ­க­மாக ஏறி வச­தி­யாக அமர்ந்துகொண்­ட­துடன்  தனது வாலால் அவ­ரது கண்ணை மறைத்­துள்­ளது.

பூனையின் மேற்படி செயற்பாட்டின் போது சிரிப்பை அடக்க சிரமப்பட்டவாறு பேட்டியைத் தொடர்ந்த பேராசிரியர்,  பூனை வாலால் கண்ணை  மறைத்ததும் வேறு வழி தெரியாது அதனது வாலை  ஒதுக்கி அதனை  தனது தோளிலிருந்து இறங்கச் செய்ய நேர்ந்தது.