கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் அவருடன் இணைந்து எவராவது செல்பி எடுத்து என்னிடம் காண்பித்தால் தான் பதவி விலகத் தயாராகவுள்ளதாக பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிபதி ரொட்றிக்கோடுதொர்ட் சவால் விடுத்துள்ளார்.

'கடவுள் ஒரு முட்டாள்' எனத் தெரிவித்து ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே அவர் மேற்படி சவாலை விடுத்துள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடவுள் இருப்பதற்கான தர்க்கவியல் ஆதாரம் எங்கே? எவராவது ஒருவர் கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக கடவுளுடன் செல்பி எடுத்து எனக்கு காண்பிப்பாரானால் நான் உடனடியாக பதவி விலகத் தயாராகவிருக்கிறேன்.

எனினும் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாகவுள்ள பில்லியன் கணக்கான நட்சத்திரங்களினதும் கோள்களினதும் மோதுகை  இடம்பெறாமல் கடவுள் அல்லது உச்ச நிலையிலுள்ள ஒரு சக்தி தடுத்து வருவதாக தான் கருதுகிறேன் என்றார்.