மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் தயாராகியிருக்கும் 96 என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எதிர்வரும் 12 ஆம் திகதியன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மெட்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் எனும் நிறுவனம் தயாரிப்பில், “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” என்ற படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம்குமார் இயக்குநராக அறிமுகமாகும் படம் 96. இதில் விஜய் சேதுபதி, திரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

இதற்கு கோவிந்த் மேனன் இசையமைக்க, என் சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பிரேம் குமார். 

படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது,‘ சுற்றுலாத்துறையில் புகைப்படக் கலைஞர் கதாபாத்திரத்தில் விஜய சேதுபதி நடிக்கிறார். பாடசாலை ஆசிரியராக திரிஷா நடிக்கிறார். 

இதில் விஜய் சேதுபதி 16, 36, 96 ஆகிய வயதுள்ள மூன்று வேடங்கிளில் நடிக்கிறார். அழகிய அழுத்தமான காதல் கதை இது. படத்தின் படபிடிப்பு முடிவடைந்துவிட்டதால் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட எண்ணியிருக்கிறோம். ஜுலை 12 ஆம் திகதியன்று மாலை ஐந்து மணியளவில் இதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து டீஸரும், சிங்கிள் ட்ரக்கும் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.’ என்றார்.