(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசியக் கட்சியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதற்காக கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்த நாம் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையே ஆதரிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீடிகொடி தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்.

மாகாணசபைத் தேர்தல் பழைய முறையிலேனும் உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். தேர்தல் எந்த முறையில் நடந்தாலும் கட்சிகளின் வெற்றி தோல்விகளை தீர்மானிப்பது மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. 

நாம் ஐ.தே.கவின் கொள்கைளில் உடன்பாடின்மையினால் தான் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகினோம். இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் ஐ.தே.கவை வீழ்த்துவதற்காக அக் கட்சிக்கு எதிராக செயற்படும் கட்சி எதுவாக இருந்தாலும் அவர்களுடன் கைகோர்க்க நாம் தயாராகவுள்ளோம். இதன் காரணமாகவே கூட்டு எதிர்கட்சியுடன் இணைய தீர்மானித்தோம் என்றார்.