வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிக்க இந்திய மீனவர்கள் தீர்மானம்

Published By: Digital Desk 4

09 Jul, 2018 | 04:15 PM
image

இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த  ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த பதினாறு மீனவர்களையும் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து இலங்கையில் சிறைகளில் அடைத்துள்ளனர்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து  இராமேஸ்வரம் விசைபடகு  மீனவர்கள் இன்று இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர்.

இக்கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும், கடந்த 5 ஆம் திகதி ,கைது செய்யப்பட்ட  ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டம் அமுல்படுத்த இலங்கை முயற்சித்து வருவதற்க்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும், டீசல் விலை அதிகரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்படைவதால் டீசலின் விலை உயர்வை திரும்பப் பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை  வேதாரணயம் உள்ளிட்ட ஐந்துமாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவஅமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால்  சுமார் 850 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.  சுமார் 10 ஆயிரம் மீனவர்களும்  5 ஆயிரம் மீன்பிடி சார் தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்  நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17