வடக்கு, மத்திய கொழும்பு உள்வரும் கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம் : மனோ, ரவி, பெளசி இணைத்தலைவர்களாக நியமனம்

Published By: Robert

26 Feb, 2016 | 03:02 PM
image

வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய 2 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை டாம் வீதி, கொழும்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு  குழு இணைத்தலைவர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகிய அமைச்சரவை அமைச்சர்களும், தேசிய ஒருங்கிணைப்பு ராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌசி ஆகிய மூவரும் கலந்து கொண்டார்கள். 

கொழும்பு பிரதேச செயலாளர் டி.பி. விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இந்த பிரதேசத்தின் அரச நிர்வாக அதிகாரிகள் பெருந்தொகையானோர் கலந்துக்கொண்டார்கள்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய  கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய 2 தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த பிரதேச செயலக பிரிவில் சுமார் 350,000 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதுவே இந்நாட்டின் மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட பிரதேச செயலக பிரிவு ஆகும். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும். இங்கே சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர் கலந்து ஐக்கியமாக வாழ்கிறார்கள். எல்லா மதத்தவரும் வாழ்கிறார்கள்.  நாங்கள் இந்த பிரதேச செயலக பிரிவை முன்மாதிரி பிரதேச செயலக பிரிவாக மாற்றி, முழு நாட்டுக்கும் ஒரு முன்னுதாரணமாக செய்து காட்டுவோம். இந்த நிலைப்பாட்டிலேயே இணைத்தலைவர்களான அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, பௌசி ஆகியோரும் உள்ளனர். நாங்கள் மூவரும் இது தொடர்பில் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளோம். நாட்டின் நிதி அமைச்சர் எங்களில் ஒருவராக இருப்பதுவும் நல்லதுதானே. 

நான் ஒன்றை விரும்புகிறேன். இந்த ஒருங்கிணைப்பு குழு என்பது ஓர் குட்டி அரசாங்கமாக செயற்படவேண்டும். ஆகவே இந்த குழு கூட்டத்துக்கு இந்த பிரதேசத்தின் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் சமூகமளிக்க வேண்டும். எதிர்வரும் கூட்டத்தில் கொழும்பு மாநகரசபை, நகர அபிவிருத்தி சபை, தாழ்நில அபிவிருத்தி சபை, நீர் வழங்கல் சபை, மின்சார சபை, பிரதேச பொலிஸ் நிலைய மற்றும் பிரிவு அதிகாரிகள், போதைவஸ்து நிவாரண அதிகாரசபை, மேல்மாகாணசபை செயலாளர் அலுவலகம், தேசிய வீடமைப்பு சபை, கொழும்பு கல்வி வலய அதிகாரிகள் ஆகிய அனைத்து துறையினரையும் அழைக்க வேண்டுமென இணைத்தலைவர்களான நாம் தீர்மானித்துள்ளோம். 

அடுத்த கூட்டத்துக்கு இந்த முதல் கூட்டத்துக்கு வருகை தராத அனைத்து அரச அதிகாரிகளும் வர வேண்டும். வருபவர்கள் தங்களது நிறுவனங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும், வருகை தராத அரச அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்கைகளை எதிர்நோக்க வேண்டி வரும். இதை பிரதேச செயலாளர் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இது இந்த கொழும்பு செயலக பிரிவின் முதல் கூட்டம். கடந்த ஒரு வருடமாக இந்த கூட்டம் நடைபெறவில்லை என்றும், இப்போது இது ஓர் ஆண்டுக்கு பிறகு நடைபெறுவதாகவும் பிரதேச செயலாளர் என்னிடம் கூறியுள்ளார். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி இதை நாம் கிரமாக முன்னெடுப்போம். இங்கேதான் மிகப்பெரும் தொகையான மக்கள் வாழ்கிறார்கள். எனவே இந்த பிரதேசத்தில் வாக்குகளை பெற்ற அனைத்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற, மாகாணசபை, கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களும் வந்து கலந்துக்கொள்வார்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43