துருக்கியில் பயணிகள் புகையிரதம் தடம் புரண்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

பல்கேரியா நாட்டின் கபிகுல் பகுதியில் இருந்து துருக்கியின் இஸ்தான்புல் நகருக்கு 360 பயணிகளுடன் சென்ற  பயணிகள் புகையிரதம் தெகிர்டாக் பகுதியில் செல்லும் போது குறித்த புகையிரதத்தின் ஆறு பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் புகையிரதத்தில் பயணம் செய்த 10 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் மரணித்துள்ளனர்.. இதனையடுத்து பலி எண்ணிக்கை தற்போது 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என அந்நாட்டின் துணை பிரதமர் ரெகேப் அக்டக் இன்று தெரிவித்துள்ளார்.