கொழும்பு  லோட்டஸ் சுற்றுவட்ட வீதிப் பகுதியில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதி மூடப்பட்டுள்ளது.

குறித்த ஆர்பாட்டத்தை  அரச கணக்காய்வாளர்கள் மற்றும் கணக்காய்வாளர்கள்  முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இதனால் காலி முகத்திடல் சுற்று வட்டப் பகுதியினுடாக  லோட்டஸ் வீதிக்கு பயணிக்கும் பாதையே ஆர்ப்பாட்டத்தின் காரணமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சாரதிகளை மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸர் கேட்டுக்கொண்டுள்ளனர்.