கிளிநொச்சி பகுதியில் இரவு வேளைகளில் வீடுகளில் புகுந்து கொள்ளைச் சம்பவங்களுடன் ஈடுபட்டு வந்த ஆறு பேர் அடங்கிய கும்பலொன்றை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 17 தொடக்கம் 24 வயதுடையவர்கள் எனவும் இவர்களிடமிருந்து கணினிகள், டெப் தொலைபேசிகள் மற்றும் 16 கிராம் நிறையுடைய உருக்கிய தங்க உருண்டைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.