ஜப்பானில் தொடர்ச்சியாக நீடித்துவரும் அடை மழை காரணமாக உயரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வடைந்துள்ளதுடன் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமலும் போயுள்ளதாக அந் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஜப்பானின் முக்கிய நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வெள்ளப்பெருக்கு காரணாக இதுவரை உயரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ள நிலையில் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமலும் போயுள்ளனர். இவர்களை தேடும் நடவடிக்கை தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் நாட்க்களுக்கு தொடர்ந்தும் மழை பெய்ய வாய்ப்புள்ளதனால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பதுடன் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அங்கு தோன்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.