ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 4.186 கிலோ கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளினை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர். இதன் மொத்த பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமென கணக்கிடப்பட்டுள்ளது.