சிங்கப்பூர் சென்ற பிரதமரை பின்தொடர்ந்தால் அர்­ஜுன மகேந்­தி­ரனை கண்­டு­பி­டிக்­கலாம்

Published By: Vishnu

09 Jul, 2018 | 07:49 AM
image

(ஆர்.யசி)

அர்­ஜுன மகேந்­தி­ரனை கைது செய்ய வேண்டும் என்றால் அல்­லது அவர் இருக்­கு­மி­டத்தை கண்­ட­றிய வேண்டும் என்றால் சிங்­கப்பூர் சென்­றுள்ள பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பின்  தொட­ர­வேண்டும். அவ்­வாறு பின் தொடர்ந்தால்  இல­கு­வாக கண்­ட­றிய முடியும் என மக்கள் விடுதல‍ை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்தார்.

 இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

தேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது. இது மிகவும் முக்­கி­ய­மான சட்­ட­மாகும். குறிப்­பாக 100 நாட்கள் ஆட்­சியில் இந்த சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தாக அர­சாங்கம் வாக்­கு­றுதி கொடுத்­தது. தகவல் அறியும் சட்­ட­மூலம் போன்று அதற்கு சம­மா­ன­தாக  இதனை கொண்­டு­வ­ரு­வ­தாக வாக்­கு­றுதி கொடுத்­தனர். எனினும் மிகவும் காலம் கடந்தே இந்த சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஆரம்­பத்தில் பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில்   இதனை தடுக்க பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலையில் நாம் அழுத்தம் கொடுத்­தது மட்டும் அல்­லாது, அர­சாங்கம் கொண்­டு­வ­ரா­த­போது நாம் தனி நபர் பிரேர­னை­யாக இதனை கொண்­டு­வ­ரவும் தயா­ராக இருந்தோம். 

அர­சாங்கம் தனது அர­சியல் தேவைக்கு அமைய இந்த சட்­ட­மூ­லத்தை தயா­ரித்து வைத்­துள்­ளது. இதில் கணக்­காய்வு திணைக்­களம் சுயா­தீ­ன­மாக செயற்­பட எந்த  வாய்ப்­பு­களும் வழங்­கப்­ப­ட­வில்லை. கணக்­காய்­வாளர் நாய­கமும் சுயா­தீ­ன­மாக  செயற்­பட இட­ம­ளிக்­க­வில்லை. ஒரு சட்டம் இருக்­கின்­றது என்­பதை காட்­டவே இன்று அர­சாங்கம் இதனை நிறை­வேற்­றி­யுள்­ளது. சட்டம் மட்­டுமே இருந்தும் எந்த பலனும் இல்லை. இது தேசிய முக்­கி­யத்­துவம் வாய்ந்த சட்­ட­மாக கரு­தப்­பட வேண்டும். இதன் மூல­மாக பல்­வேறு ஊழல்­களை தடுக்க முடியும். பிர­தேச சபைகள், மாகா­ண­ச­பைகள், பாரா­ளு­மன்ற, அரச நிறு­வ­னங்கள் மட்­டு­மல்­லாது தனியார் நிறு­வ­னங்­களின் விசா­ர­ணை­களை நடத்­தவும் அதி­காரம் வழங்­கப்­பட வேண்டும் என்ற தன்­மைக்கு அமை­யவே கணக்­காய்வு சட்­ட­மூலம் உரு­வாக்­கப்­பட்­டது. 

ஆனால் நிறை­வேற்றும் போது இவை அனைத்­துமே பறிக்­கப்­பட்டு வெறு­மனே காலத்தை கடத்தும் செயற்­பா­டாக அமைந்­துள்­ளது. கணக்­காய்­வாளர் தனது அதி­கா­ரங்­களை செயற்­ப­டுத்த முடி­யாது அமைச்­ச­ரவை தீர்­மானம் மூல­மாக தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

உள்­ளக கணக்­காய்­வு­களை செய்ய முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. தேசிய ரீதியில் உரு­வாக்­கப்­பட்ட இந்த சட்­டத்தில் இவை பறிக்­கப்­பட்­டுள்­ளன. அரச அதி­காரி ஒருவர் பொய்­யான கருத்­தினை விசா­ர­ணை­களில் முன்­வைத்தால் அது தவறு என நிரு­பிக்­கப்­பட்டால் அவ­ருக்­கான உய­ரிய தண்­டனை 1 இலட்சம்  என்று இந்த சட்டம் கூறி­யுள்­ளது. இந்த திட்­டத்தை 5 ஆயி­ர­மாக குறைக்க அர­சாங்­கமே யோச­னையை கொண்­டு­வந்­துள்­ளது. 

சட்­டத்தில் உள்ள கோரிக்­கை­யையும் நிரா­க­ரித்து அர­சாங்கம் குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் பக்­கமே நிற்­கின்­றது. இந்த சட்­டத்தை  கொண்­டு­வ­ரு­வதன் மூல­மாக குற்­ற­வா­ளி­களை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை   முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். சட்­டத்­தையே பல­வீ­னப்­ப­டுத்தும்  நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் கையாள்­கின்­றது. நாம் 16 திருத்­தங்­களை   முன்­வைத்தோம்.  ஆனால் அவற்றில் ஒரு சில­வற்றை ஏற்­று­கொண்ட போதும் எமது யோச­னை­களை அவர்­களின் யோச­னை­க­ளாக முன்­வைத்­தனர். 

எனது ஆடையை வேறு ஒருவர்  அணிந்­து­கொண்டு அவ­ரது ஆடை­யாக கூறு­வது போன்­றதே இந்த அர­சாங்கம் செய்­து­கொண்ட விட­ய­மாகும். இந்த சட்­டத்தை பல­வீ­ன­ப்ப­டுத்­திய பிர­தான பொறுப்பு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையே சாரும். ஊழல் வாதி­களை காப்­பாற்ற, ஊழலை மறைக்க பிர­தம அமைச்­சரும் ஏனைய அமைச்­சர்­களும் இணைந்து சூழ்ச்சி செய்­து­விட்­டனர். அமைச்­சர்­களின் தேவைக்­காக அரச அதி­கா­ரிகள் செய்யும் தவ­று­களை இன்று அமைச்­சர்கள் காப்­பாற்­று­கின்­றனர். 

கென்யா நாட்டின் கணக்­காய்வு சட்­டத்தை பார்த்தால், கணக்­காய்­வா­ள­ருக்கு  அதீத அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஊழல் குற்­றங்­களில் நேர­டி­யாக பொலி­ஸுக்கு  முறைப்­பாடு செய்­யவும் அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் அவ்­வாறு ஒன்றும் இல்லை, வெறு­மனே பாரா­ளு­மன்­றத்தில் தெரி­விக்க முடியும். அதை தாண்டி எத­னையும் செய்ய முடி­யாது. மேலும் பிர­த­ம­ரது சிங்­கப்பூர் விஜயம் எதற்­காக என்­பது எமக்குத் தெரி­யாது. 

எனினும் மேமு­தலாம் திக­தியில் இருந்து நடை­மு­றைக்கு வந்­துள்ள சிங்­கப்பூர் உடன்­ப­டிக்கை குறித்து கண்­டிப்­பாக இந்த விஜ­யத்தில் கலந்­து­ரை­யா­டப்­படும் என நம்ப முடியும். ஆனால் அர்­ஜுன மஹேந்­தி­ரனை மீண்டும் இலங்­கைக்கு கொண்­டு­வர பிர­தமர் போக­வில்லை என்­ப­தையும் கூற முடியும். எனினும் அர்­ஜுன மஹேந்­திரன் எங்கு ஒளிந்­துள்ளார் என்­பதை தெரிந்­து­கொள்ள வேண்டும் என்றால் பிர­தமர் பின்னால் ஒருவர் பின்­தொ­டர்ந்தால்  அவரை பிடிக்க முடியும். ஊட­கங்­களும் அதனை செய்ய முடியும். அப்­போது அவரை கண்­ட­றிய முடியும். சில­வே­ளை­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உத­யங்க வீர­துங்­கவை வர­வ­ழைப்­ப­தாக கூறி­யதை போன்று பிர­தமர் அர்­ஜுன மஹேந்­தி­ரனை வர­வ­ழைக்க சென்­றாரோ தெரி­ய­வில்லை. நீ உத­யங்­கவை வர­வ­ழைத்தால் என்னால் அர்­ஜு­ன­வையும் வர­வ­ழைக்க முடியும் என்ற நேரடி சவால் ஏதும் உள்­ளதா என்­பதும் தெரி­ய­வில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58