தாய்லாந்தில் கடந்த இரண்டு வாரங்களிற்கும் மேல் குகையொன்றிற்குள் சிக்குண்டுள்ள சிறுவர்களில் இருவர் சற்று முன்னர் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று ஆரம்பிக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்

இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் குகையொன்றிற்குள் கடந்த  இரண்டு வாரங்களிற்கு மேல் சிக்குண்டுள்ள சிறுவர்களை மீட்பதற்கான புதிய நடவடிக்கையை மீட்பு பிரிவினர் இன்று ஆரம்பித்துள்ளனர்.

மீட்பு பிரிவினர் குகைக்குள் நுழைந்துள்ளனர் என அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அத்தியாவசிய பணிகளுடன் தொடர்பற்ற அனைவரும் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், சுழியோடிகளும் மருத்துவர்களும்  படையினரும் மாத்திரம் அங்கு காணப்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய மீட்பு பணிகளில் வெளிநாடுகளை சேர்ந்த 13 சுழியோடிகள் உட்பட 18 பேரை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.