ஆர்­ஜன்­டீ­னாவில் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 6ஆம் திகதி முதல் 16ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்ள மூன்­றா­வது இளையோர் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்­று­வ­தற்கு இலங்­கையின் பாரமி வசன்தி மாரிஸ்­டெல்லா, டிலான் போய­கொட, செனிரு அம­ர­சிங்க, ஷெலிண்டா ஜேன்சன் ஆகியோர் தகு­தி­பெற்­றுள்­ளனர்.

தாய்­லாந்தில் கடந்த வார மத்­தியில் நடை­பெற்ற இளையோர் ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வுக்­கான ஆசிய மெய்­வல்­லுநர் தகு­திகாண் போட்­டி­களில் இலங்­கை­யி­லி­ருந்து பங்­கு­பற்­றிய எழு­வரில் நால்வர் அடைவு மட்­டங்­களை எட்­டி­யதன் மூலம் இத் தகு­தியைப் பெற்­றனர்.

பெண்­க­ளுக்­கான 2,000 மீற்றர் தடை­தாண்டி ஓட்டப் போட்­டியை 6 நிமி­டங்கள் 35.20 செக்­கன்­களில் நிறைவு செய்த குளி­யாப்­பிட்டி மத்­திய கல்­லூ­ரியின் பாரமி வசன்தி மாரிஸ்­டெல்லா முதலாம் இடத்தைப் பெற்று இளையோர் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற தகு­தி­பெற்றார்.

இது அவ­ரது தனிப்­பட்ட சிறந்த நேரப் பெறு­தி­யாகும். இதே போட்­டியில் பங்­கு­பற்­றிய பரா­மியின் பாட­சாலை தோழி பிமாஷி அஷ்­மிகா ஹேரத் (7 நி. 09.95 செக்.) மூன்றாம் இடத்தைப் பெற்­ற­போ­திலும் அவரால் தகு­தி­பெற முடி­யாமல் போனது. 

ஆண்­க­ளுக்­கான 400 மீற்றர் ஓட்டப் போட்­டியை 48.58 செக்­கன்­களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்ற கொட்­டாஞ்­சேனை புனித ஆசீர்­வா­தப்பர் கல்­லூ­ரியின் டிலான் போகொ­டவும் இளையோர் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற தகு­தி­பெற்றார்.அத்­துடன் ஆண்­க­ளுக்­கான உயரம் பாய்­தலில் 2.14 மீற்றர் உயரம் தாவிய இரண்டாம் இடத்தைப் பெற்ற தேனுக்க செனிரு அம­ர­சிங்க (றோயல் கல்­லூரி), பெண்­க­ளுக்­கான 200 மீற்றர் ஓட்டப் போட்­டியை 25.50 செக்­கன்­களில் நிறைவு செய்து 4ஆம் இடத்தைப் பெற்ற ஷெலிண்டா ஜேன்சன் (கெட்வே சர்­வ­தேச பாட­சாலை) ஆகி­யோரும் இளையோர் ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் பங்­கு­பற்ற தகு­தி­பெற்­றனர்.

இவர்­களை விட தினெத் சேனா­நா­யக்க (ஆண்கள் 200 மீற்றர், பம்­ப­லப்­பிட்டி புனித பேது­ரு­வா­னவர்), சமு­திகா ஹேரத் (பெண்கள் 1500 மீற்றர், வலல்ல ஏ. ரட்­நா­யக்க) ஆகி­யோரும் இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய மெய்வல்லுநர் தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றிய போதிலும் அவர்களால் பிரகாசிக்க முடியாமல் போனது.