அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருளவள்ளி கீழ் பிரிவு தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 ஆண் தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இழக்காகி அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சிகிச்சைக்காக அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 15 தொழிலாளர்களில் 13 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

(க.கிஷாந்தன்)