பெனல்டிகளில் கோட்டை விட்டது ரஷ்யா அரை இறுதியில் நுழைந்தது குரோஷியா

Published By: Digital Desk 4

08 Jul, 2018 | 03:46 PM
image

குரோஷியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி கால் இறுதிப் போட்டியில் 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்ட குரோஷியா உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையில் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியின் வழமையான முழுநேர ஆட்டத்தின்போது கோல் நிலை 1 க்கு 1 என சமமாக இருந்தது. மேலதிக ஆட்டநேர நிறைவில் கோல் நிலை 2 க்கு 2 என சமநிலையில் இருந்தது. இதனை அடுத்து மத்தியஸ்தரால் அமுல்படுத்தப்பட்ட பெனல்டிகளில் வரவேற்பு நாடான ரஷ்யா தோல்வி அடைந்து வெளியேறியது.

பிரான்ஸில் 1998இல் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளில் முதல் தடவையாக பங்குபற்றி நான்காம் இடத்தைப் பெற்ற குரோஷியா, இப்போது இரண்டாவது தடவையாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

சொந்த நாட்டு இரசிகர்களின் அளவுக்கு அதிகமான ஆரவாரம், ஆர்ப்பரிப்பு, உற்சாகமூட்டல் ஆகியவற்றுக்கு மத்தியில் எதிரணியான குரொஷியாவை அச்சுறுத்திய வண்ணம் ரஷ்யா விளையாடிது. 

குரோஷியாவின் எதிர்த்தாடலுக்கு ஈடுகொடுத்து விளையாடிய ரஷ்யா ஒரு சந்தர்ப்பத்தில் பதில் எதர்த்தாக்குதல் தொடுத்து முதலில் முன்னிலை அடைந்தது.

போட்டியின் 31ஆவது நிமிடத்தில் ரஷ்ய வீரர் டெனிஸ் செரிஷேவ் இடது காலால் ஓங்கி உதைத்த பந்து குரோஷிய கோலின் மேல் மூலை ஊடாக உள்ளே சென்றது.

ஆனால் குரோஷியா அடுத்த எட்டாவது நிமிடத்தில் பதிலடி கொடுத்து கோல் நிலையை சமப்படுத்தியது. அண்ட்ரெய் க்ராமெரிக் மிக இலாவகமாக தலையால் பந்தை தட்டி கோல் போட்டு ரஷ்யர்களை அதிரவைத்தார்.

அதன் பின்னர் இரண்டு அணியினரும் கோல் போடுவதற்கான வாய்ப்புகளை மிக அரிதாகவே பெற்றனர். ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலைப் போட்டிருந்ததால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

மேலதிக நேரத்தின் 11ஆவது நிமிடத்தில் (101 நி.) டொமாகொய் விடா கோல் ஒன்றைப் போட்டு குரோஷியாவை முன்னிலையில் இட்டதுடன் அரங்கில் அதுவரை ஆரவாரம் செய்துகொண்டிருந்த ரஷ்ய இரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

எவ்வாறாயினும் 115ஆவது நிமிடத்தில் டிஸா கோயெவ்வின் ப்றீ கிக்கை நோக்கித் தாவிய மரியோ பெர்னாண்டெஸ் தலையால் தட்டி கோல் நிலையை சமப்படுத்தி ரஷ்யாவின் தற்காலிக ஹீரோவானர். ஆனால் பெனல்டி முறையில் ரஷ்யாவுக்கு கைகொடுக்கத் தவறியதால் இரசிகர்களின் கடும் கண்டனத்துக்கு பெர்னாண்டெஸ் உள்ளானார்.

ரஷ்ய வீரர் பெடோர் ஸ்மோலொவ்வின் முதலாவது பெனல்டியை குரோஷிய கோல்காப்பாளர் டெனியல் சுபாஷிக் தடுத்ததுடன் பெர்னாண்டோஸின் மூன்றாவது பெனல்டி இலக்கு தவறியது. குரோஏஷிய வீரர் கோவாசிக்கின் பெனல்டியை (இரண்டாவது) அக்கினீவ் தடுத்தார்.

ரஷ்யா சார்பாக அலன் டிசாகோயெவ் (இரண்டாவது), சேர்ஜி இஞ்ஞாஷேவிச் (நான்காவது), டேலர் குஸாயேவ் (ஐந்தாவது) ஆகியோரும் குரோஷியா சார்பாக மார்செலோ ப்ரோஸோவிக் (முதலாவது), லூக்கா மொட்ரிக் (மூன்றாவது), டொமாகொய் விடா (நான்காவது), ஐவன் ராக்கிடிக் (ஐந்தாவது) ஆகியோரும் கோல்களைப் போட்டனர். இதன் பிரகாரம் 4 க்கு 3 என்ற பெனல்டி அடிப்படையில் அரை இறுதி வாய்ப்பை குரோஏஷியா பெற்றுக்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21