வவுனியா நகரசபையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கோரப்படும் தகவல்களுக்கு உரிய காலப்பகுதியில் பதில் வழங்கப்படுவதில்லை என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரசபையின் செயற்பாடுகள் மற்றும் நகரசபைக்குட்பட்ட சில விடயங்கள் தொடர்பில் தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பங்கள் வழங்கிய போதும் நகசபையினர் அவற்றுக்குரிய பதில்களை உரிய காலப்பகுதிக்குள் வழங்காது கால இழுத்தடிப்புக்களை செய்து வருகின்றனர்.

அரசாங்கத்தால் பொது மக்கள் தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பங்களை பெறுகின்ற போது அவ் விண்ணப்பத்தை பெற்று 14 நாட்களுக்குள் அதற்கான பதில் அல்லது பதில் வழங்க முடியுமா, முடியாதா என்பதை தெரியப்படுத்த வேண்டும். ஆனால் வவுனியா நகரசபைக்கு விண்ணப்பங்களை வழங்கி  14 நாட்கள் கடந்தும் எந்த வித பதில்களும்  வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.