பிரதமர் ரணில் விக்ரமசிங்க தல‍ைமையிலான 15 பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்று இன்று சிங்கப்பூர் நோக்கி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆறாவது உலக நகர மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டே பிரதமர் மேற்கண்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். 

சிங்கப்பூர் செல்லும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அந் நாட்டின் பிரதமர் மற்றும் உயர் மட்ட தலைவர்களையும் சந்திக்வுள்ளதுடன் நாளை ஆரம்பமாகும் இந்த மாநாட்டில் அவர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.