தென்னாபிரிக்க பந்து வீச்சாளர்களின் ரிவேர்ஸ் ஸ்விங்கே சவால்- திலான்

Published By: Rajeeban

08 Jul, 2018 | 09:05 AM
image

ரிவேர்ஸ்  ஸ்விங்கினை எதிர்கொள்வதே நாங்கள் எதிர்கொள்ளப்போகும் மிகப்பெரும் சவால் என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் பயிற்றுவிப்பாளர் திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியில் மிகத்திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர் தற்போது உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் ரபாடாவே மிகத்திறமையானவர் என நான் கருதுகின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக முதல் 20 30 ஓவர்கள் நாங்கள் எவ்வாறு துடுப்பெடுத்தாடுவோம் என்பது முக்கியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய அணிக்கு எதிராக சிறப்பாக துடுப்பெடுத்தாடாத வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவில் ஒரு வீரர் எவ்வாறு துடுப்பெடுத்தாடினார் என்பதை அடிப்படையாக வைத்து மாத்திரம் ஒரு வீரரை மதிப்பிட முடியாது,மேற்கிந்திய தீவுகளில் துடுப்பாட்டம் மிகவும் சவாலானதாகயிருக்கும் என எதிர்பார்த்தோம் ஆனால் இவ்வளவு சவாலாகயிருக்கும் என எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் நாங்கள் தற்போது எங்கள் சூழ்நிலைகளில் விளையாடுகின்றோம், இதன் காரணமாக எங்களால் சிறப்பாக செயற்படமுடியும் என திலான் சமரவீர தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35