(ஆர்.ராம்)

'மக்கள் வெள்ளம்' என்ற தொனிப்பொருளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறுக்கோரி நாடு தளுவிய ரீதியில் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளனர்.

இப் போராட்டமானது எதிர்வரும் 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. எனினும் குறித்த இந்தப் போராட்டங்களில் முதற்போராட்டம் பொலனறுவையில் இருந்து ஆரம்பிப்பதா அல்லது அநுராதபுரத்திலிருந்து ஆரம்பிப்பதா என்பது குறித்து இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.