(ஆ.ராம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் தம்மை பாராளுமன்றத்தில் சுயாதீன அணியாக அங்கீகரிக்குமாறு சபாநாயகர் கருஜயசூரியவிடத்தில் எழுத்துமூலமாக கோரிக்கை விடுக்கவுள்ளனர்.

அந்த வகையில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரும், 16 பேர் கொண்ட சுதந்திரக்கட்சியின் சுயாதீன அணியினரும் இணைந்து செயற்பட இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் கூட்டு எதிரணியினர் தம்மை  சுயாதீன அணியினராக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் விடுப்பதற்கு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.