ஈரலில் கொழுப்பு சேர்­வதால் ஏற்­படும் நோய் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வதில் சீனி பிர­தான பங்­க­ளிப்புச் செய்யும் ஒன்­றாக விளங்­கு­கின்ற நிலையில், மேற்­படி பாதிப்பைக் குணப்­ப­டுத்­து­வ­ன­வாக காளான்­களில் காணப்­படும் ஒருவகை சீனி மூலக்­கூ­றுகள் அமைந்­துள்­ளதை விஞ்­ஞா­னிகள் கண்­ட­றிந்­துள்­ளனர்.

காளான்­களில் இயற்­கை­யான முறையில் காணப்­படும் றைஹாலோஸ் என்ற சீனி வகை­யா­னது தீங்கு விளை­விக்கும் சீனி வகை­யான பிரக்டோஸ் ஈரல் கலங்­க­ளுக்குள் பிர­வே­சிப்­பதை தடுப்­ப­தாக அமெ ­ரிக்க வாஷிங்டன் பல்­க­லைக்­க­ழக மருத்­துவப் பாட­சா­லையைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன் றைஹாலோஸ் சீனி வகை­யா­னது ஈரலில் மேல­தி­க­மாக சேரும் கொழுப்பை அகற்றி அதனை ஆரோக்­கி­ய­மாக பேணு­வ­தாக அவர்கள் கூறு­கின்­றனர்.

மது­பா­வனை தவிர்ந்த வழி­மு­றையால் ஏற்­படும் ஈரல் கொழுப்பு நோயா­னது ஒரு­வ­ரது உடல் பரு­ம­னுடன் நெருங்­கிய தொடர்பைக் கொண்­டுள்­ளது. இதனால் அமெ­ரிக்­கா­வி­லுள்ள 25 சத­வீ­த­மான மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்த நோய் பாதிப்பின் போது ஈரல் பிரக்டோஸ் சீனியின் சமி­பாட்டு செயற்கி­ர­மத்தில் பங்­கேற்க கடும் சிர­மத்தை எதிர்­கொள்­கி­றது. பிரக்­டோ­ஸா­னது பழங்கள் மற்றும் இனிப்­பூட்­டப்பட்ட மென்­பா­னங்­களில் இயற்­கை­யாகக் காணப்­ப­டு­கி­றது.

எமது உடல் பிரக்­டோஸை றைகி­ளி­சரைட்ஸ் என்­ற­ழைக்­கப்­படும் கொழுப்­பாக ஈரலில் சேக­ரிக்­கி­றது.

இந்­நி­லையில் மேற்­படி கொழுப்பு அளவு கடந்த நிலையை அடையும் போது ஈரல் பாதிக்­கப்­பட்டு ஈரல் மாற்று சிகிச்­சையை மேற்­கொள்ள வேண்­டிய அவ­சியம் ஏற்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் விஞ்­ஞா­னிகள் இது தொடர்பில் எலி­களில் மேற்­கொண்ட பரி­சோ­த­னையின் போது, அவற்­றுக்கு அதிக அளவில் பிரக்­டோ­ஸையும் 3 மடங்கு றைஹா­லோஸை கொண்ட நீரையும் வழ ங்கி வந்தபோது அந்த எலி­களின் ஈரல் அள­வுக்­க­தி­க­மான பிரக்­டோஸால் கொழு ப்பு சேர்ந்து பாதிக்­கப்­ப­டாமல் இயல்பு நிலையில் இருப்­பது அவதானிக்கப்பட்டுள் ளது. அத்துடன் அவற்றின் குருதிச் சுற் றோட்டத்தில் கொலஸ்ரோல், கொழுப்ப மிலம் மற்றும் றைகிளிசரைட்ஸ் என்பவற் றின் அளவும் தாழ்ந்த மட்டத்தில் காணப் பட்டுள்ளன.