அமெரிக்காவில் போதை மருந்துக்காக பெற்ற மகனை 1½  இலட்சத்துக்கு விற்ற தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கார்பல்கிறிஸ்டி நகரை சேர்ந்த 29 வயதான  பெண் எஸ்மெரால்டா சார்ஜா இவருக்கு போதை மருந்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.

இவர் தனது காதலருடன் இணைந்து போதை மருந்து பயன்படுத்தி வந்தார். ஒரு கால கட்டத்தில் போதை மருந்து வாங்கியவரிடம் பணம் செலுத்தாததால் போதை மருந்து கிடைக்கவில்லை.

போதை மருந்து கிடைக்காமல் தவித்த அவர் தனது 7 வயது மகனை நியூசெஸ் கவுண்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் ஒரு லட்சத்து 65 ஆயிரத்துக்கு விற்றுள்ளார்.

குறித்த சம்பவம் பற்றிய தகவல் தெரிந்ததும் பொலிஸார் தீவிர  நடவடிக்கை மேற்கொண்டனர். 

நியூசெஸ் கவுண்டியில் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்த 7 வயது சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

போதை மருந்துக்காக பெற்ற மகனை விற்ற எஸ்மெரால்டா சார்ஜாவை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.