காஷ்மீர் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

Published By: Digital Desk 4

07 Jul, 2018 | 02:13 PM
image

இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்தில் இன்று பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளம்பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்திற்குட்பட்ட ஹவூரா ரேட்வானி கிராமத்தில் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அந்த கிராமத்தை முற்றுகையிட்ட பாதுகாப்பு படையினர் அங்குள்ள வீடுகளில்  சோதனை நடத்த தொடங்கிய போது அவர்களை அனுமதிக்க மறுத்த அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தி, தேடுதலை தடுத்தனர். 

இதைதொடர்ந்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அன்ட்லீப் என்ற இளம்பெண், இர்ஷாத் மற்றும் ஷாகிர் ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர். சிலர் காயம் அடைந்தனர். 

தொடர்ந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்று வருவதாகவும், குல்காம் மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவுவதாகவும், சம்பவ இடத்துக்கு கூடுதலாக படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17