ஜப்பானில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் 15 பேர் பலியாகியுள்ளனர் .

ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், ஒகயாமா, ஹிரோசிமா மற்றும் யமாகுச்சி போன்ற அந்நாட்டின் முக்கிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதனால், சாலைகள் சேதமடைந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், காணாமல்போனவர்களை தேடும் பணிகளில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.