குரோஷியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழையுமா ரஷ்யா?

Published By: Digital Desk 4

08 Jul, 2018 | 08:07 AM
image

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரவேற்பு நாடான ரஷ்யாவை இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள கடைசி கால் இறுதிப் போட்டியில்  குரோஷியா எதிர்த்தாடவுள்ளது. 

சொச்சி, பிஷ்ட் விளையாட்டரங்கில் இப் போட்டி இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அத்துடன் இந்த விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள கடைசி உலகக் கிண்ணப் போட்டி இதுவாகும்.

முழு உலகக் கிண்ணப் போட்டியில் அல்லாவிட்டாலும் நொக் அவுட் சுற்றில் எதிர்பாராத வெற்றியை ஈட்டிய ரஷ்யா, அரை இறுதிக்கான தகுதியைப் பெறும் கங்கணத்துடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.

முன்னோடி கால் இறுதிப் போட்டிகளில் முறையே ஸ்பெய்னையும் டென்மார்க்கையும் ரஷ்யாவும் குரோஏஷியாவும் பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்டே இன்றைய கால் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.

கால் இறுதிகளுக்குள் நுழைந்த மற்றைய ஆறு அணிகளுடன் ஒப்பிடுகையில் இந்த இரண்டு அணிகளும் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் மிகக் குறைவு. எனவே இன்றைய போட்டியில் இரண்டு அணிகளும் கடும் முயற்சியுடன் விளையாடுவது அவசியமாகும்.

பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாத போதிலும் சொந்த மண்ணில் விளையாடுவதால் எதையாவது சாதிக்க முடியும் என்ற எண்ணத்துடன் போட்டியிட்டு வந்த ரஷ்யா, இன்றைய போட்டியில் தமது இரசிகர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் குரோஷியாவை வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பைப் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்றாலும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவை எதிர்வு கூறுவது சுலபமல்ல. எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலையே காணப்படுகின்றது.

ரஷ்யாவைப் பொறுத்த மட்டில் அதன் முக்கிய பின்கள வீரர் யூரி ஸேர்க்கோவ் இன்றைய போட்டியில் விளையாடுவது சந்தேகம். இது அவ்வணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும். 

குரோஏஷியாவைப் பொறுத்தமட்டில் அதன் ஐந்து உலகக் கிண்ண அத்தியாயங்களில் இரண்டில் வரவேற்பு நாடுகளிடம் தோல்வியையே தழுவியது. வரவேற்பு நாட்டுக்கு எதிராக குரோஷியா விளையாடவுள்ள மூன்றாவது உலகக் கிண்ண போட்டி இதுவாகும்.

இந்த இரண்டு அணிகளும் இரண்டு தடவைகள் ஐரோப்பிய கிண்ணப் போட்டியில் சந்தித்தபோது அப் போட்டிகள் கோல்கள் எதுவும் இல்லாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. ஆனால் நட்புறவு சர்வதேச போட்டியில் ரஷ்யாவை 3 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் குரோஷியா வெற்றிகொண்டிருந்தது. 

ரஷ்ய அணியில் அதன் தலைவர் கோல்காப்பாளர் இகோர் அக்கின்வீவ், ஆர்ட்டெம் டிஸியுபா, டெனிஸ் செரிஷேவ், அலெக்ஸாண்டர் கோலோவின் ஆகியோரும் குரோஷிய அணியில் அதன் தலைவர் லூக்கா மொட்ரிக், ஐவன் பெரிசிக், மரியோ மாண்ட்ஸூக்கிக் ஆகியோரும் பிரதான வீரர்களாக இடம்பெறுகின்றனர். 

அணிகள்

ரஷ்யா: இகோர் அக்கின்வீவ் (அணித் தலைவர்), மரியோ பெர்னாண்டஸ், இலியா குட்டேபோவ், சேர்ஜி இஞ்ஞாஷேவிச், பெடோர் குட்ரியாஷோவ், ரோமன் ஸொப்னின், டேலர் குஸியேவ், அலெக்சாண்டர் சமெடோவ், அலெக்ஸாண்டர் கோலோவின், டெனிஸ் செரிஷேவ், ஆர்ட்டெம் டிஸியுபா.

குரோஷியா: டெனியல் சுபாசிக், சிமே விர்சால்ஜ்கோ, டிஜான் லவ்ரென், டொமாகொஜ் விடா, ஐவன் ஸ்ட்ரினிக், ஐவன் ராக்கிடிக், மார்செலோ ப்ரோஸோவிக், அன்டே ரெபிக், லூக்கா மொட்ரிக் (அணி்த் தலைவர்), ஐவன் பெரிசிக், மரியோ மண்ட்ஸூக்கிக்.  (என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41