ஏ - 9 வீதி கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெபித்திகொல்லேவ - ஹல்மில்லவெடிய பிரதேசத்தினை சேர்ந்த நபரே உயிரிழந்துள்ளார். 

இன்று அதிகாலை கெபித்திகொல்லேவ தொடக்கம் மதவச்சி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு உரித்தான, பஸ்ஸிலிருந்து இறங்க முயற்சித்த  நபர் ஒருவர், பஸ் பின் புற சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.