7 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

Published By: Daya

07 Jul, 2018 | 09:33 AM
image

ஜப்பானில் சுரங்கப்பாதை ஒன்றில் நச்சு வாயு தாக்குதல் நடத்தி, 13 பேரை கொன்று குவித்த சாமியார் உள்ளிட்ட 7 பேர் ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில், 1995ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 20ஆம் திகதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின்போது ஜேர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆர்கனோ பாஸ்பரஸ் வகை நரம்பு வாயு ஆகும்.

இந்த வாயு தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர், சிலருடைய கண்களில் பார்வை பறிபோனது, சிலர் பக்கவாதத்துக்கு ஆளாகினர். 13 பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலும் குற்றச்சம்பவங்களே நடைபெறாத ஜப்பானில் இந்த நச்சு வாயு தாக்குதல் சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பல இடங்களில் ஹைட்ரஜன் சயனைடு தாக்குதலுக்கு முயற்சிகள் நடந்து, அவை முறியடிக்கப்பட்டன.

குறித்த சம்பவங்களில், அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா 63 வயதான சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். 

குறித்த வழக்கு விசாரணையின்போது, ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த டொமோமசா நககவா (55), கியோஹைட் ஹயகவா (68), யோஷிஹிரோ இனாவ் (48), மசாமி சுசியா (53), செய்ச்சி என்டு (58) டொமோமிட்சு நீமி (54) ஆகிய 6 பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

ஆனாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு டோக்கியோ மாவட்ட  நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை அந்த நாட்டின் உயர் நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் உறுதி செய்தது. ஆனாலும் அனைவரும் மரண தண்டனையில் இருந்து தப்புவதற்கு பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தினர். இவை அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தன. அவற்றின் முடிவுகள், சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராகவே அமைந்தன.

குறித்த நிலையில், ஷோகாவும், மற்ற 6 பேரும் டோக்கியோ சிறையில் வைத்து நேற்று ஒரே நாளில் தூக்கிலிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52