கனடாவில் சுட்டெரிக்கும் வெப்பத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கனடாவில் கடும் வெப்ப நிலை நீடித்து வருகிறது. இதனால் நாட்டின் மேற்குக் கடலோரப் பகுதி முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அப்பகுதி மக்கள் கடும் வெப்பத்தாலும், புழுக்கத்தாலும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். காட்டுத் தீயும் அங்கு கட்டுக்கடங்காமல் தொடர்கின்றது.

மத்திய கனடாவில் அமைந்துள்ள மாண்ட்ரியல் நகரில் வெயில் சுட்டெரித்து வருகிறது.

  இந்நிலையில், கனடாவில் சுட்டெரிக்கு வெயிலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

மேலும், வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க நீச்சல் குளங்களை நீண்ட நேரம் திறந்து வைக்கும்படி  அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக மாண்ட்ரியல் நகரில் மட்டும் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில தினங்களில் இயல்பு நிலை திரும்பி விடும் என கனடாவின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.