உருகுவே கோல்காப்பாளர் தாரைவார்த்த  2 வது கோலுடன் அரை இறுதிக்குல் கால்பதித்த பிரான்ஸ்

Published By: Digital Desk 4

06 Jul, 2018 | 11:29 PM
image

கோல்காப்பாளர் பெர்னாண்டோ முஸ்லேரா இழைத்த பெருந்தவறு காரணமாக இரண்டாவது கோலைத் தாரைவார்த்த உருகுவேயை, நிஸ்னி, நொவ்கோரோட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரான்ஸ் வெற்றிகொண்டது.

இந்த வெற்றியுடன் முதலாவது அணியாக உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்ற பிரான்ஸ், உலகக் கிண்ண வரலாற்றில் ஆறாவது தடவையாக அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது.

போட்டியின் இரண்டாவது பகுதியில் பிரான்ஸ் வீரர் அன்டொய்ன் க்றீஸ்மான் மிகவும் பலமாக இடது காலால் உதைத்த பந்தை தனது உள்ளங் கைகளால் கோல்காப்பாளர் முஸ்லேரா தடுக்க முற்பட்டபோது பந்து அவரது கைகளில் பட்டு கோலினுள் சென்றதுடன் பிரான்ஸின் கோல் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது.

முதல் சுற்றிலும் முன்னோடி கால் இறுதியிலும் ஒரு கோலைத்தானும் விடாமல் இருந்த முஸ்லேரா இப் போட்டியில் இரண்டு கோல்களை விட்டமை உருகுவேக்கு பேரிடியாக அமைந்தது. 

மறுபுறத்தில் பிரான்ஸ் அணித் தலைவர் கோல்காப்பளார் ஹியூகோ லோரிஸ் மிகவும் அபாரமாக செயற்பட்டு உருகுவேயின் கோல் போடும் முயற்சிகளைத் தடுத்ததை அவதானிக்க முடிந்தது.

இரண்டு அணிகளும் சமமாக மோதிக்கொண்ட இப்போட்டியின் 39ஆவது நிமிடம்வரை எந்த அணியும் கோல் போட்டிருக்கவில்லை.

40ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் முதலில் கோல் போட்டது. ப்றீ கிக் பந்தை தலையால் முட்டிய  ரபாயல் வரேன், பிரான்ஸின் முதலாவது கோலைப் போட்டார். இந்தக் கோல் பிரான்ஸ் வீரர்களைப் பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியதுடன் உருகுவே வீரர்களை அதிர்ச்சி அடையச் செய்தது.

இடைவேளையின் பின்னர் பிரான்ஸ் எல்லையை ஆக்கிரமித்து கோல் நிலையை சமப்படுத்த உருகுவே முயற்சித்தபோதிலும் பின்கள வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் அவை முறியடிக்கப்பட்டன. 

உருகுவேயின் முக்கிய வீரர்களில் ஒருவரான எடின்சன் கெவானி உபாதை காரணமாக இப் போட்டியில் வியைாடாதது அவ்வணிக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஒரு சந்தர்ப்பத்தில் பிரான்ஸ் கோல்காப்பாளர் ஹியூகோ லோரிஸ் வலப்புறப் பக்கவாட்டில் தாவி பந்தைத் தடுத்தமை பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

போட்டியின் 61ஆவது நிமிடத்தில் பெனல்டி எல்லைக்கு வேளியே இருந்து (சுமார் 20 யார்) க்றீஸ்மான் பலமாக உதைத்த பந்து முஸ்லேராவின் உள்ளங்கைகளில் பட்டு கோலினுள் புகுந்தது. அவர் அப் பந்தை முஷ்டியால் தட்டியிருந்தால் ஒருவேளை அந்த கோல் தடுக்கப்பட்டிருக்கலாம் என்பது பலரது அபிப்பிராயமாகும். 102ஆவது போட்டியில் விளையாடிய முஸ்லெரா இந்தத் தவறை தனது வாழ்நாளில் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.

போட்டியின் 69ஆவது நிமிடத்தில் எதிரணி வீரர் தன்னைத் தாக்கியதாக பாசாங்கு செய்து கீழே வீழ்ந்த 19 வயதுடைய எம்பாப்வே வலியால் துடிப்பதுபோல் நடித்தார். இதனைத் தொடர்ந்து உருகுவே வீரர் க்றிஸ்டியன் ரொட்றிகூஸுக்கும் எம்பாப்பேக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படவே இருவரும் மத்தியஸ்தரின் மஞ்சள் அட்டைக்கு இலக்கானதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் கோல் போடுவதற்கு உருகுவே எவ்வளவோ முயன்றும் அது எதுவும் பலனிக்காமல் போக பிரான்ஸ் அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்துகொண்டது. 

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22