வரலாற்று சிறப்புமிக்க கண்டி நித்தவளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் வருடாந்த தேர்த்திருவிழா இடம்பெற்றது.

கண்டி நித்தவளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா கடந்த 26 ஆம் திகதி தொடக்கம் 03அம் திகதி வரை வெகு விமர்சையாக இடம்பெற்றது. 

29ஆம் திகதி நள்ளிரவு கரகம் பாலித்தலும் மறுநாள் 30ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணியளவில் பாற்குடமும் 108 சங்காபிஷேகம் இடம்பெற்று மாலை 4 மணியளவில் வேட்டை திருவிழாவுடன் வசந்த மண்டப பூஜை நடைப்பெற்று தேர் திருவிழா ஆரம்பமாகியது.

தேர் திருவிழா வெளிவீதி உலா சென்று 1 ஆம் திகதி காலை மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. 

2ஆம் திகதி மாலை மஞ்சள் நீர் விழா இடம்பெற்று திருவிழா இனிதே நிறைவு பெற்றது.