விஜயகலா மீதான ஒழுக்காற்று விசாரணைக்காக சிரேஸ்ட அமைச்சர்கள் அடங்கிய குழுவொன்றை ஐக்கியதேசிய கட்சி நியமித்துள்ளது.

ஐக்கியதேசிய கட்சியால் நியதிக்கப்பட்ட குழுவில்  அமைச்சர்கள் தலதா அத்துக்கோறள,அகிலவிராஜ் காரியவசம், ஹபீர் ஹாசிம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளிற்கு மீண்டும் புத்துயுர் வழங்கவேண்டும் என விஜயகலா  யாழ்ப்பாணத்தில் ஆற்றிய உரை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ள நிலையில் இது குறித்து விசாரணை செய்வதற்காக ஐக்கியதேசிய கட்சி இந்த குழுவை நியமித்துள்ளது.