(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி ) 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பயன்படுத்தி அதன் மூலமாக தேர்தலை தள்ளிப்போடவே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும சபையில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் நோக்கம் இந்த அரசாங்கத்திற்கு கிடையாது. அரசாங்கம் தனது பலவீனத்தை மறைக்கவே முயற்சித்து வருகின்றது. மாகாணசபை கலைக்கப்பட்டு இன்று ஒரு வருடகாலமாகவுள்ள நிலையில் மூன்று மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறாதுள்ளது.

இந் நிலையில் அரசாங்கம் மக்கள் ஆணையை மீறியே செயற்பட்டு வருகின்றது. ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பதில்லை. தற்போது நாடு செல்லும் பாதையை பார்த்தால் எமக்கு அச்சம் ஏற்படுகின்றது. அத்துடன் அரசாங்கத்தினால் தேர்தலை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்தி தமது நோக்கங்களை நிறைவேற்ற பார்க்கின்றனர் என்றார்.