பேஸ்புக், டுவிட்டர் இணை­யத்­தள ஸ்தாப­கர்­க­ளுக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆத­ர­வா­ளர்கள் அச்­சு­றுத்தல்

Published By: Raam

26 Feb, 2016 | 09:02 AM
image

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆத­ர­வா­ளர்கள், பேஸ்­புக்கின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி மார்க் சக்கர் பேர்க் மற்றும் டுவிட்­டரின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி ஜக் டோர்ஸி ஆகி­யோ­ருக்கு புதிய காணொளிக் காட்­சி­யொன்றில் அச்­சு­றுத்தல் விடுத்­துள்­ளனர்.

'ஆத­ர­வா­ளர்­களின் தீச்­சு­வாலை' என்ற தலைப்பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள அந்த 25 நிமிட காணொளிக் காட்சியில் மேற்­படி இரு தலைமை நிறை­வேற்­ற­தி­கா­ரி­களின் புகைப்­ப­டங்­களும் துப்­பாக்கி ரவை துளைத்­தி­ருப்­பதை வெளிப்­ப­டுத்தும் காட்­சி உள்­ள­டங்கி­யி­ருந்­தது.

தீவி­ர­வா­தி­களின் சமூக இணை­யத்­தளப் பக்­கத்தில் இந்தக் காணொளிக் காட்சி வெளியி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தாம் 10,000 பேஸ்புக் கணக்­கு­க­ளையும் 150 பேஸ்புக் குழுக்­க­ளையும் 5,000 டுவிட்டர் பக்­கங்­க­ளையும் தமது கட்­டுப்­பாட்­டில்­வைத்­துள்­ள­தாக ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் ஆ­த­ரவா­ளர்கள் குழு குறிப்­பிட்­டுள்­ளது.

அத்­துடன் இதன்­போது அந்தக் காணொளித் திரையில் 'பேஸ்புக் மற்றும் டுவிட்­டரின் ஸ்தாப­கர்­க­ளான மார்க், ஜக்­கிற்கு' என்ற வாசகம் காண்­பிக்­கப்ட்­டது.

கலிபா இரா­ணு­வத்தின் மகன்கள் என தம்மைத் தாமே அழைத்துக் கொண்­டுள்ள அந்தக் குழு, பேஸ்புக் மற்றும் டுவிட்­ட­ரி­லுள்ள தமது பக்­கங்கள் அழிக்­கப்­ப­டு­வ­தற்கு கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.

தமது பக்­கங்கள் அழிக்­கப்­ப­டு­வ­தற்குப் பதி­லாக பேஸ்புக் மற்றும் டுவிட்டரின் தளங்களை அழிப்பதுடன் மார்க் மற்றும் ஜக் ஆகியோரின் பெயர்களையே இல்லாமல் செய்துவிடவுள்ளதாக அந்தக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52