மெக்சிகோவின் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோ நாட்டின் மத்திய பகுதியில் மிகப் பெரிய பட்டாசுச் சந்தை அமைந்துள்ளது. அங்கு பட்டாசு விற்பனை அதிகளவில் நடைபெற்று வந்ததால் பட்டாசுகளை வாங்க மக்கள் குவிவது வழ்க்கம்.

இந்நிலையில், மெக்சிகோ பட்டாசு சந்தையில் நேற்று காலை 9.15 மணியளவில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அங்கு கடைகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இந்த வெடி விபத்தில் 17 பேர் பலியாகிளனதோடு. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

தகவலறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.