டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த விடயத்தில், அந்த குடும்பத்திடம் ஆவி ஒன்று பேசியதன் குறிப்புகள் வெளியாகியுள்ளது. 

குறித்த குடும்பத்தின் வீட்டு தலைவரான தந்தை இறந்து ஆவியாக வந்து பேசியது என்னென்ன என்பது தொடர்பான  குறிப்புகளில் கிடைத்துள்ளன

டெல்லி புராரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் பொலிஸ் விசாரணையில் பல கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

அதேபோல் இவர்கள் எப்படி எல்லாம் குறித்த தற்கொலை சடங்கிற்கு தயாரானார்கள் என்றும் சிசிடிவி குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து தூக்கு மாட்டிக்கொள்ள வசதியாக கயிறு, புதிய கதிரை, இரும்பு கம்பிகள், கட்டுவதற்கு துணி போன்ற பொருட்களை வாங்கி வந்துள்ளனர். இது எல்லாம் தாத்தா ஆவியின் ஆணையின் பேரில் செய்துள்ளனர்.

அந்த டைரி குறிப்புகளில் இருந்து தற்போது புதிய விடயமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புராரியின் இறந்து போன தந்தை தினமும் என்ன பேசுகிறார் என்ற குறிப்புகள் இருந்துள்ளது. 

அதில் ''நீ இந்த சடங்கை செய்தால்தான் என் ஆத்மா சாந்தி அடையும். உங்களுக்கும் மோட்சம் கிடைக்கும். என்னுடன் 5 ஆவிகள் உள்ளன. நீ ஹரித்வார் போக வேண்டாம். இந்த சடங்கை வீட்டிலே செய்தால் எல்லோருக்கும் மோட்சம் கிடைக்கும்'' என்றுள்ளது

அதற்கு பின் உள்ள டைரி குறிப்பில், இறந்த முதியவரிடம் பதில் சொல்லும் விதமாக '' இங்கே எல்லாம் நன்றாக செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சடங்கிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில், சடங்கை வெற்றிகரமாக செய்யலாம். சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டோம்'' என்று குறிப்புகள் உள்ளது.

இதில் மிகவும் மோசமான அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்றும் இருந்துள்ளது. இந்த குடும்பம் போலவே, அவர்களின் உறவினர் குடும்பம் ஒன்று கடந்த சில வருடங்களாக சிக்கி இருந்துள்ளது. அவர்கள் வசதி பெறுவதற்கு இந்த சடங்கை செய்யலாமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஆவி, இப்போது வேண்டாம், இந்த சடங்கு முடித்த பின் செய்யலாம் என்று கூறியுள்ளதாக குறிப்பில் உள்ளது