ஒரு மணித்­தி­யால உடற்பயிற்­சியின் போது 24 மணி நேரத்­துக்கு போது­மான மின்­சா­ரத்தை உற்பத்தி செய்யக் கூடிய சக்­கர உப­க­ர­ண­மொன்றை இந்திய நிறு­வ­ன­ மொன்று வடி­வ­மைத்­துள்­ள­தாக பிரித்தா­னிய டெய்லி மெயில் ஊடகம் வியாழக்­கி­ழமை செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

பிறீ எலெக்றிக் வண்டி என அழைக்­கப்­படும் மேற்­படி உப­க­ரணம் மனித சக்­தி­யி­லி­ருந்து மின் சக்­தியை பிறப்­பிக்கும் வல்­ல­மையைக் கொண்­டுள்­ளது என லிவிங் எஸென்ஸல் என்ற மேற்­படி நிறு­வ­னத்தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி மனோஜ் பர்­கவா தெரி­வித்தார்.

இந்த உப­க­ர­ணத்தின் மிதி பல­கையை மிதித்து ஒருவர் உடற்­ப­யிற்சி செய்யும் போது அவ­ரது சக்தி வீண­டிக்­கப்­ப­டாமல் ஒரு நாளுக்குப் போது­மான மின்­சக்­தி­யாக மாற்­றப்­ப­டு­கி­றது என அவர் கூறினார். மேற்­படி உப­க­ரணத்தின் மூலம் ஒரு தடவை பிறப்­பிக்­கப்­படும் மின்­சக்­தியைப் பயன்­ப­டுத்தி ஒரு கைய­டக்­கத்­தொ­லை­பேசி, ஒரு டப்லட் கணினி, மின்­வி­சிறி என்­ப­வற்றை ஒரே­ச­ம­யத்தில் மின் ஏற்ற முடியும் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த உடற்பயிற்சி சக்கர உபகரணம் எதிர்வரும் மாதம் முதல் இந்தியாவெங்கும் பாவனைக்குவிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.