தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு எப்போது ஏற்பட்டது என்பது குறித்து புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.

அப்பலோ வைத்தியசாலையின் வைத்தியர் நளினி ஆறுமுகசாமி ஆணையகம் முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்தே இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

டிசம்பர் நான்காம் திகதி மாலை 3.50 மணிக்கு ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டது அவருக்கு எக்கோ பரிசோதனை செய்யவேண்டும் என என்னை அழைத்தார்கள், ஜெயலலிதாவின் இதயம் செயலிழந்த பின்னரே என்னை அழைத்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

நான் அங்கு சென்றவேளை அவரின் இதயத்தினை மசாஜ் மூலம் இயங்கசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் நான் எக்கோ பரிசோதனை செய்தவேளை அவர் இறந்துவிட்டதை உணர்ந்தேன் என நளினி குறிப்பிட்டுள்ளார்.

அப்பலோ வைத்தியசாலையில் தாக்கல் செய்திருந்த மனுவில் ஜெயலலிதாவிற்கு 4.30 மணிக்கே மாரடைப்பு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ள நிலையிலேயே நளினி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனை ஆறுமுகசாமி ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.